Diploma Teaching 2021 - Online Application 

Open Competitive Examination for the recruitment to Grade 3-I (C) of the Sri Lanka Teachers’ Service for English Teacher Vacancies in National and Provincial Schools and for the Vacancies in Information Technology, Home Economics and Aesthetic Subjects (Art, Music, Dancing) in Northern and Eastern Provinces - 2021
Diploma Teaching 2021 - Online Application

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 ஆம் வகுப்பின் 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

முக்கிய குறிப்பு: விண்ணப்பங்கள் இணையவழி (ONLINE) ஊடாக மாத்திரமே முன்வைக்க முடியும். விண்ணப்பங்களை இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியில் (3) முதல் (6) வரையிலான பகுதிகளை கையெழுத்தில் பூர்த்திசெய்து விண்ணப்பதாரரியின் ஒப்பத்தை உறுதிப்படுத்தி (7) உரிய பெயர்கள் நிறுவன தலைவரின் சான்றிதழுடன் (8) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்திற்கு முன்னர் பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கானது

1.  தகவல் தொழில்நுட்பம் (ICT)
2.  மனையியல் - (Home Science)
3.  சங்கீதம் - Music
4.  சித்திரம் - Arts
5.  நடனம் -  Dance

நாடு முழுவதுக்குமானது
6.  ஆங்கிலம் (English)

கல்வித் தகைமைகள்

01. கல்வி விடயத்திற்கு பொறுப்பான நிரல் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப் படுகின்ற இரண்டு வருடங்களுக்கும் குறையாத காலவரம்புடன் கூடிய தேசிய தொழில் திறன் மட்டம் (6) க்கு குறைவில்லா தகுதியினைக் கொண்ட் டிப்ளோமா பாடத்திட்டம் ஒன்றை சிறப்பாக கற்று பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

02. இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் ஒழுங்குவிதிகளுக்கமைய கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாக சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

03. வயதெல்லை : 18-35

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
“The Commissioner General of Examinations, 
Organizations and Foreign Examinations Branch, 
Department of Examinations, Sri Lanka, 
Post Box 1503, 
Colombo.
பரீட்சைக் கட்டணம் 600 ரூபாய்கள்




5 Comments

Post a Comment

Previous Post Next Post