தற்போது க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று வாய்ப்புள்ளதுஎனவும் மேலும் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (03) கண்டி - கலகெதரவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
“அதேவேளை ஜூன் மாதத்திற்குள் க.பொ.த. சாதாரண தர முடிவுகளை வழங்கவும், ஜூலை மாதத்தில் உயர்தர வகுப்புகளைத் தொடங்கவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி, மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியும் என மேலும் தெரிவித்தார்.
விடுதிகள் பிரச்சினை உள்ளது, தற்போது வரை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. இதற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, சமூக மட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார இயக்குநர் ஜெனரலின் ஆலோசனையைப் பெறுவோம் என்று நம்புகிறோம். பல்கலைக்கழகங்கள் விரைவில் தொடங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment