Sub Station Master Vacancies 2021 - Sri Lanka Railways

Sub Station Master Vacancies 2021 - Sri Lanka Railways

சாதாரண தர தகைமையுடன்,

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெற்றிடம் காணப்படும் உப புகையிரத நிலையங்கள்

  1. ரதெல்ல 
  2. திம்பிரியாகெதர 
  3. ஈரட்டிபெரியகுளம்
  4. பத்தன்பஹ 
  5. லியனகேமுல்ல 
  6. அறிவியல் நகர்
  7. மஹய்யாவ 
  8. கப்புவத்தை 
  9. மிருசுவில்
  10. நாவின்ன 
  11. முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் 
  12. லக்ஷஉயன
  13. பன்னிப்பிட்டிய 
  14. கட்டுவ 
  15. மொல்லிபொத்தான
  16. வட்டரெக்க 
  17. வயிக்கால 
  18. அவுக்கன
  19. புவக்பிட்டிய 
  20. எருக்கலம்பிட்டி நாகவில்லு
  21. பயாகல வடக்கு
  22. வனவாசல
  23. மங்கலஎலிய 
  24. பின்வத்தை
  25. பெம்முல்ல 
  26. பெந்தொட்ட 
  27. நாக்குலுகமுவ
  28. வந்துரவ 
  29. தாண்டிக்குளம் 
  30. பேரலந்த
  31. கிராம்பே
  32. நேரியகுளம்

கல்வித் தகைமை

க. பொ. த. (சா/ தரப்) பரீட்சையில் சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலத்துடன் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் சிறப்பு சித்தியுடன் ஆறு விடயங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

வேறு தகைமைகள்.-

விண்ணப்பதாரி குறிப்பிட்ட உப புகையிரத நிலையத்திலிருந்து 20 கி. மீ. தூரத்திற்குள் (நேரடி தூரம்) குறைந்தது 05 வருட காலம் நிரந்தர வதிவுடையவராக இருத்தல் வேண்டும்.

ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.

வயதெல்லை.- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் தினத்தன்று வயது 18 க்கு குறையாமலும் 45 க்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

புகையிரத முகாமையாளர் 

த. பெ. இலக்கம் 355,

புகையிரத முகாமையாளர் அலுவலகம்

கொழும்பு - 10

வர்த்தமானி | விண்ணப்ப படிவம்

Post a Comment

Previous Post Next Post