கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை (13) முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வியமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்விமையச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொழும்பிலுள்ள அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள் நாளை (13) முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரை மூடப்படும் என கொழும்பு கத்தோலிக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. (News First)
Post a Comment