ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது உடல் நிலை குறித்த தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த தகவல்களை பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் தகவல்கள் கல்வியமைச்சு என்ற இணையவழியூடாக வழங்கமுடியாமல் போனால் தாம் பரீட்சைக்கு தோற்றும் மத்திய நிலையத்தில் தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.
அத்தோடு இதற்கான படிவம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியிடம் வழங்குவதற்காக வலைய மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இதில் பதிவாகும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அனைத்து மாகாண வலைய கல்வி பணிப்பாளர்களுக்கும், பரீட்சை மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்லைன் படிவம் இதோ:
படிவத்துக்கு இந்த லிங்கை அழுத்துங்கள் – https://info.moe.gov.lk/
முக்கிய குறிப்புகள் :
1. மேலுள்ள லிங்கை அழுத்தும் போது கீழுள்ளவாறு தோன்றும். அதில் சிவப்பு அம்புக்குறி மூலம் எம்மால் கட்டம் கட்டிக் காட்டப்பட்டுள்ளதை அழுத்தும் போது நீங்கள் நிரப்ப வேண்டிய படிவம் வரும்.
2. இவ்வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் அனைத்து மாணவர்களும் இதனை நிரப்புதல் வேண்டும்.


Post a Comment