கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் IIIஇற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2020
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III AND TRAINEE GRADE OF LIVESTOCK DEVELOPMENT INSTRUCTOR IN NORTHERN PROVINCE - 2020
1. கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்குரிய தகைமைகள்
1. க.பொ.த (சா/த)பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம்/ ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் (C) சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
2. க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் இரண்டு (02) பாடங்கள் உட்பட மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல்
2. கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்குரிய தகைமைகள் :-
1. க.பொ.த (சா/த)பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம்/ ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் (C) சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
2. க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல், விவசாயம், பௌதீகவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் இரண்டு (02) பாடங்கள் உட்பட மூன்று (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல்
3. மற்றும் பின்வருனவற்றுள் ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்
3.1. அநுராதபுரம், குண்டசாலை ஆகிய விலங்கு பரிபாலன பயிற்சிப் பாடசாலைகளில் அல்லது விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வேறு ஏதாவது பயிற்சிப் பாடசாலைகளில் இருந்து “விலங்கு பரிபாலனம்”((Animal Husbandry) சம்பந்தமான இரண்டு வருட கற்கைநெறியில் டிப்ளோமாச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
02. இலங்கையின் ஏதாவதொரு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும ; சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள அரச பயிற்சி நிறுவனத்தினால் “விலங்கு பரிபாலனம்”((Animal Husbandry) சம்பந்தமான இரண்டு வருட கற்கைநெறியில் டிப்ளோமாச் சான்றிதழினை பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
03. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட “விலங்கு பரிபாலனம்”((Animal Husbandry) சம்பந்தமான இரண்டு வருட கற்கைநெறியில் டிப்ளோமாச் சான்றிதழ் அல்லது “விலங்கு பரிபாலனம்”((Animal Husbandry) பற்றிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய தேசிய தொழிற்பயிற்சி தகைமை மட்டம் 6 (NVQ LEVEL 06) அல்லது அதற்கு மேலான மட்டத்தைபூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
“செயலாளர்மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்,
யாழ்ப்பாணம்

Post a Comment