OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT OF AGRARIAN SERVICE CENTERMANAGEMENT ASSISTANTS GRADE III OFFICERS UNDER THE MANAGEMENT ASSISTANTS NON – TECHNICAL – SEGMENT 2 SERVICE CATEGORIES (MN-01 - 2016) IN THE DEPARTMENT OF AGRARIAN DEVELOPMENT – 2020

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சியற்ற - சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016) இன் கீழ் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் IIIஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை -2020

பொதுவான தகைமைகள் :

  1.  இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
  2.  நன்நடத்தை உடையவராகவும் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றுவதற்கு பொருத்தமான,உடல் மற்றும் உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
  3.  விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று வயது 18 இற்குக் குறையாத 30 இற்கு மேற்படாத நபராக இருத்தல் வேண்டும். 

கல்வித் தகைமைகள் :

(அ) சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே தடவையில் (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.

மற்றும்

(ஆ) கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம்தவிர) சித்தியடைந்திருத்தல்.

வேறு தகைமைகள் :

  • தொழிற் தகைமைகள் மற்றும் அனுபவம் விசேட தகைமைகளாகக் கருதப்படும்.
  • அனைத்து விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய அனைத்து தகைமைகளையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்
  • இறுதித் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் பூரணப்படுத்தியிருத்தல் அவசியமாகும்.

எழுத்துப் போட்டிப் பரீட்சைக்கான நிபந்தனைகள் :

 எழுத்துப் பரீட்சையில் ஒவ்வொரு வினாத்தாள்களிலும் 40… புள்ளிகளையோ அதற்கு மேலதிகமாகவோ பெற்றுக் கொள்ளும் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த புள்ளிகளின் திறமைத் தொடரொழுங்கில் மாவட்ட மட்டத்தில் காணப்படும் வெற்றிட எண்ணிக்கைக்கு அமைவாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும்

எழுத்துப் போட்டிப் பரீட்சைக்குரிய பாட விதானம் :

 பரீட்சை 02 வினாத்தாள்களைக் கொண்டது.

1. கணக்கீடு -காலம் 02 மணித்தியாலம் - மொத்த புள்ளிகள் 100

2. புரிந்துணர்வு - காலம் 02 மணித்தியாலம் - மொத்த புள்ளிகள் 100

 (சித்தியடைதலின் பொருட்டு ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்த புள்ளிகளில் 40… வீதம் விண்ணப்பதாரிகள்

பெற்றுக் கொள்ள வேண்டும்.)

6. சம்பள அளவுத்திட்டம் (மாதாந்தம்) : பொது நிர்வாக சுற்றறிக்கை 3/ 2016 இல. MN-01 -2016 சம்பள தொகுதியின் கீழ் ரூபா 27,140- 10x300- 11x350- 10x495- 10x660-ரூபா 45,540.00 ஆகும்.

விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சை ஆணையாளர் நாயகம்
ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
பெலவத்தை,
பத்தரமுல்ல"

‘Commissioner General of Examinations,
Organization (Institutional and Foreign Examinations) Branch,
Department of Examinations,
Pelawatta,
Battaramulla

P. O. Box. 1503

பரீட்சைக் கட்டணம்.- விண்ணப்பதாரரினால் பரீட்சைக் கட்டணமாகச் செலுத்தப்படவேண்டிய ரூபா 600.00 பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 20-03-02-13 இன் கீழ் வருமானத்திற்கு வரவாகும் வகையில் நாடெங்கிலும் உள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் நிலையத்திற்காயினும் பணமாக செலுத்தி விண்ணப்பதாரியின் பெயரில் பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டைää அதன் ஒரு விளிம்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தின் குறித்த இடத்தில் கழறாதவாறு ஒட்டுதல் வேண்டும். பரீட்சையின் பொருட்டு காசுக் கட்டளையோ முத்திரையோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பரீட்சையின் பொருட்டு செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு காரணத்தினாலும் மீளச் செலுத்தப்படுதல் அல்லது வேறு பரீட்சையொன்றின் பொருட்டு மாற்றிக் கொள்ளப்பட மாட்டாது. தொடர் தேவையின் பொருட்டு பற்றுச்சீட்டின் நிழற் பிரதியொன்றை தம்வசம் வைத்திருத்தல் பயனுள்ளதாக அமையும்.

விண்ணப்ப படிவத்தை தரவிரக்கம் செய்ய!


1 Comments

Post a Comment

Previous Post Next Post